Wednesday, February 17, 2010

எனக்கானவை


நீங்கள் எரிக்கும்
என் பிணம் சிதறி வீழ்கையில்
வறண்டு, வாய் பிளந்ததும்
ஜீவாலையாக மாட்டேன்!
அகாலமாய் இறக்காமல்
உயிர் மட்டும் பறித்து
நெடு ஆழத்தில் புதைத்துவைப்பேன்.
என் உடல் தின்று செரித்து
காத்திருப்பேன்...
ரணங்கள் வலியெடுத்துக் கதறும்
குளிர்காலப் பகற்பொழுதொன்றில்
முனை மழுங்கிய என் விரல்களை
தேடிச்சென்று கூர் தீட்டி
தூரத்து கடல் நீரின்
ஈரம் உறிஞ்சி
செரித்த அணுக்களனைத்தும்
செலுத்தி
வேர் விட்டு,
வார்ப்பிரும்பு சங்கிலிகளுடைத்து
முளைத்தெழுவேன்!
துளிர்க்கும் அந்த நாள் முதல்
இது
எனக்கான மண்
எனக்கான வானம்
எனக்கான காடு...

Image courtesy: velhametsa.
-

17 comments:

  1. உங்கள் கவிதைத் தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. //வரண்டு// - வறண்டு

    கவிதை நல்லாருக்குங்க.

    ReplyDelete
  3. நன்றி அசோக் :)

    உங்கள் கருத்திற்க்காக காத்திருக்கிறேன் நந்தா, நன்றி :)

    நன்றி சென்ஷி, மாத்திட்டேங்க :)

    ஏங்க புனிதா பிடிக்கலையா?

    ReplyDelete
  4. அடேங்கப்பா..!!

    கவிதை மட்டும்தான் எழுதுவீங்களா..?

    நல்லா இருக்குங்க காந்தி..:))

    ReplyDelete
  5. நன்றி உழவன் :)

    நன்றி ஷங்கர். கவிதைய தவிற வேற என்ன எழுதறதுன்னு தெரியலங்க ஷங்கர். முயற்ச்சிக்கிறேன் :)

    ReplyDelete
  6. வாசித்தோம் மகிழ்ச்சி

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க காந்தி.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நன்றி சங்கர் :)

    நன்றி ரவிஷங்கர். வசிஷ்டர் வாயால்... :)

    ReplyDelete
  9. முழு நம்பிக்கையும் பேசுது கவிதை..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. "வேர் விட்டு
    முளைத்தெழுவேன்"


    --நம்பிக்கை :)

    நல்லா இருக்கு Gandhi !!

    ReplyDelete
  11. நல்லாருக்கு காந்தி.

    ReplyDelete
  12. நன்றி கமலேஷ் :)

    நன்றி நாகா :)

    நன்றி ராஜாராம் :)

    ReplyDelete
  13. படிக்கவே ரணகளமா இருக்கு.
    நம்பிக்கை கவிதை அருமை.

    ReplyDelete
  14. நன்றி ப்ரதீப் மச்சி :)

    ReplyDelete