நாளைக்கான சமன்பாட்டில்
தவிர்க்கயியலாமல்
நேற்றைய என் சிதையும்
இன்றைய எச்சமும்
எப்படியும் ஒட்டிக்கொள்கின்றன...
கதறியழுத பின்னும்
மாறமுடியாத என்னை
தீயிலிடுவதாய் எழுதி
பேனா முனை நசுக்கியிருக்கிறேன்
ஏழாவது முறையாய்.
என் கதவுகளினுள் இன்றும்
பூட்டியே கிடக்கிறேன்,
என்றாவது விழித்துப்பார்க்கையில்நானற்றதாகவே படுகிறது உலகம்.
முத்து, சிவக்குமார், சங்கர் வரிசையில்
நாளை நானுமிருக்கலாம்!
என்ன செய்ய
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?
நொடிக்கொரு துளியாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
-
//நொடிக்கொரு துளியாய்
ReplyDeleteசிந்திக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை//
சரியாச்சொல்லி இருக்கறீங்க...
//என் கதவுகளினுள் இன்றும்
ReplyDeleteபூட்டியே கிடக்கிறேன்,
என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்.
very nice..
நல்லா இருக்கு...
ReplyDelete/என் கதவுகளினுள் இன்றும்பூட்டியே கிடக்கிறேன், என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்./
வேற வழி இல்ல... பூட்டை உடைச்சாவது வெளிய வந்துதான் ஆகணும்!
ரொம்ப பிடிச்சிருக்கு காந்தி.
ReplyDeleteநன்றி சங்கவி :)
ReplyDeleteநன்றி கார்த்திக் :)
நன்றி ப்ரதீப் :)
நன்றி ராஜாராம் :) உங்கள் கவிதைகளை வாசித்தேன் மிகவும் அருமை :)
அருமை!!!!!!!
ReplyDeleteநிறைய எழுதுங்க..:))
ReplyDeleteநன்றி கார்த்தி :)
ReplyDeleteஊக்கத்திற்க்கு நன்றி ஷங்கர் :)