கனவுகளின் கனத்த பிம்பங்களிலிருந்து
மீண்டு விழித்ததும்
அதீத கூக்குரலெடுத்து
கதறுகிறதென் சுயம்.
ஏதோவொரு
ரோமநிறம் மாறிய நாளில் தான்
அதுவென்னுள்
நுழைந்திருக்கவேண்டும்.
எனக்கு வெளியே
என் சுயமென்பது
வெறும்
பிம்பமாகிப்போனதில்
அத்தனை சௌகர்யம்.
எடுப்பான அடையாளங்களை
தேர்ந்தெடுத்து அடுக்கி,
யார்யாரையோ
பூசி மொழுகப்பட்ட
அச்சு அசலானவொரு
கூழ்மம் நான்.
யாருமற்ற
யதார்த்தத்திலிருந்து
விலகிய
கணங்களில் மட்டும்
ரணம் கமழும் அவஸ்தை.
Photo courtesy: © Alexandru Bizighescu.
-
பிம்பமாகிப்போனதில்
ReplyDeleteஅத்தனை சௌகர்யம்.
எடுப்பான அடையாளங்களை
தேர்ந்தெடுத்து அடுக்கி,
யார்யாரையோ
பூசி மொழுகப்பட்ட
அச்சு அசலானவொரு
கூழ்மம் நான்.
இந்த வரிகள் .....அருமை...
நல்லாயிருக்கு :)
ReplyDeleteநன்றி ப்ரதீப் மற்றும் அசோக் :)
ReplyDeleteWelcome ganthi. After a long gap. ur language is too strong.
ReplyDeleteநன்றி ஜெயப்ரகாஷ் :)
ReplyDelete