Wednesday, December 09, 2009

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு



டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு 'அகநாழிகை' பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளில் என் கவிதைத் தொகுப்பும் வெளிவர உள்ளது, தலைப்பு 'கூர்தலறம்.' இந்த தொகுப்பு எனக்கு ஒரு சுவையான ஆச்சர்யம். இந்த தொகுப்பை வெளியிட உதவிய தோழி லாவண்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'அக‌நாழிகை' பொன்.வாசுதேவ‌ன் அவர்களின் கவிதைகளின் வாசகன் நான், அவரின் 'அக‌நாழிகை' மூலம் இந்த தொகுப்பு பிரசுரமாவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி, அவருக்கு என் நன்றிகள் கோடி. என் கவிதைகளை திருத்தி, செதுக்க உதவிய தோழி ஸ்ரீமதிக்கும், நண்பன் பிரதீப் குமாருக்கும், ஏனைய வலை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்:
கவிதைகள்:
1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)
4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

சிறுகதைகள்:
1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

கட்டுரைகள்:
1. பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)


புத்தக வெளியீட்டு விழா:



நாள்: டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இட‌ம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, 
கே.கே.நகர் (மேற்கு) (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேம். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். நேரடியாக வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் aganazhigai@gmail.com.

அனைவரும் வருக !

Monday, November 16, 2009

புதியன புகுதலும்...


குப்பையில் கிடத்திய
கிழித்த நாட்களின்
தவணை நினைவுகளை
அவள் நிரம்பிய சவப்பெட்டியில்
திணித்து
புதைக்கவைத்தது
நேற்று சந்தித்தவளின்
ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்.
ஒற்றைப் பார்வையில்
ஒளிபரப்பிக்கொண்ட
சம்மதங்கள் தாண்டி
பற்றியெறித்தது ஆதிக்கனல்.
சாம்பலாகையில்
எப்படியெனத் தெரியாமல்
நெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்!


Photo courtesy:  zycu.com
-

Thursday, November 05, 2009

Waning gibbous


Waning gibbous, originally uploaded by Gandhi Theerthagiri.
Canon 400D, 55-250mm@250, 1/10s, f/20, ISO100
On black

-