Tuesday, December 09, 2008

சிதறல்கள்

ஒரு மழைநாளில்
என் தெருவாசியான அந்த நாய்
செம்மண் நிறத்தில் ரெண்டு,
கருப்புவெள்ளையாய் ஒன்று
பெயர்தெரியாத நிறத்தில் மூன்றென
ஆறு குட்டிகள் ஈன்றிருந்தது.

ஒருநாள் ஆபீஸிலிருந்து திரும்பும்போது,
கருப்புவெள்ளை குட்டி
எதனாலேயோ இறந்திருந்தது.
செய்தித்தாள்களின் விளையாட்டுச் செய்திபோல்
விரும்பாமலும் கண்ணில் பட்டுத்தொலைத்தது.

அதைப்பார்த்த அவள்
சிலநாள் பாசத்திற்கு
வீடுவந்ததும்
தேம்பி அழுதாள்.
மணி பார்த்தவுடன்
கண்துடைத்து
வெங்காயம் வாங்கிவரச்சொல்லிவிட்டு
சமைக்கச்சென்றுவிட்டாள்.

வெங்காயம் வாங்கித் திரும்புகையில்
எங்கேயோ போயிருந்த
இறந்துப்போனதின் அம்மா
வந்து
அதை முகர்ந்துவிட்டு
அதற்கான உணவை
சாப்பிடச்சென்றுவிட்டது.

வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
அவளின் சேலை வசீகரமாய்
விலகி இருந்தது.
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டதும்
வெட்கப்பட்டாள்.

ஏதோ டிவியின்
வானிலயறிக்கையில்
நாளை மீண்டும் மழைவருமென்றது.

16 comments:

  1. அச்சோ பாவம் அந்த நாய்க்குட்டி.. :(

    ReplyDelete
  2. அமா ஸ்ரீ பாவம் அது :(

    ReplyDelete
  3. //வார்த்தைகளை இன்னும் சிக்கனமாகக் கையாண்டால், கதை சொல்லும் தொனியிலிருந்து கவிதை இன்னும் வாசமாயிருக்கும் என்று நினைக்கிறேன். //

    இதையே நானும் சொல்ல நினைந்தேன் gaandhi..

    ReplyDelete
  4. //இப்போதானங்க கவிதை எழுதவே கத்துகிட்டிருக்கேன், முழுசா அழகா எழுதுறத்துக்கு இன்னும் நாள் ஆகும்ன்னு நெனைக்கறேன் //

    இருந்தாலும் இது ஓவர் தன்னடக்கம்.. நீங்க எப்படி எழுதுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களின் நீண்ட நாளைய வாசகன் என்ற முறையில்..

    ReplyDelete
  5. சரவணன்,

    கண்டிப்பா வார்த்தைகளை சிக்கனமா உபயோகப்படுத்த ட்ரை பண்றேங்க :)

    என் கவிதைகளை பல நாளா உங்களுக்கு பரிச்சயம் என்பதிலும் உங்களுக்கு பிடித்திருப்பதிலும் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  6. காந்தி.. அடுத்த கவிதை எப்போது????

    ReplyDelete
  7. பப்ளிஷ் பண்ணாத ஏனோ டிலீட் பண்ணிட்டார்.. :))

    ReplyDelete
  8. @சரவணன்,
    இப்போதாங்க ஒரு கவிதை
    பப்ளிஷ் பண்ணிஇருக்கேன், உங்க கவிதை பசிக்கு சோளப்பொறியா!

    @ஸ்ரீ,
    பப்ளிஷ் பண்ணாதத ட்ராப்ட்ல வச்சிருந்தேன் :)

    காந்தி

    ReplyDelete
  9. //TKB Gandhi said...
    @சரவணன்,
    இப்போதாங்க ஒரு கவிதை
    பப்ளிஷ் பண்ணிஇருக்கேன், உங்க கவிதை பசிக்கு சோளப்பொறியா!//

    இந்த சாக்குல சரவணன யானைங்கறியா?? ;))

    ReplyDelete
  10. //இந்த சாக்குல சரவணன யானைங்கறியா?? ;))//

    அடடடா! இந்த விளையாட்டுக்கு நான் வரல :)

    ReplyDelete
  11. நாய்குட்டி கதை ரொம்ப்ப டச்சிங்கா இருந்துச்சு..

    ஆனா

    // வீடுவந்ததும்,
    கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
    அவளின் சேலை வசீகரமாய்
    விலகி இருந்தது.
    வெங்காயம் கொடுத்துவிட்டு
    காதோரமாய் முத்தமிட்டதும்
    வெட்கப்பட்டாள்.
    //
    என்ன மிக்ஸ்-டா இது? "அழகி" படத்துல தேவை இல்லாத குத்து பாட்டு மாதிரி..
    இந்த மாதிரி அங்க அங்க ஏதாவது எழுதுனாதான் உங்க கவிதைய படிப்பாங்கன்னு நினைச்சுட்டீங்களா?? திருந்துங்கப்பா..

    ReplyDelete
  12. //venkatx5 said...

    // வீடுவந்ததும்,
    கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
    அவளின் சேலை வசீகரமாய்
    விலகி இருந்தது.
    வெங்காயம் கொடுத்துவிட்டு
    காதோரமாய் முத்தமிட்டதும்
    வெட்கப்பட்டாள்.
    //
    என்ன மிக்ஸ்-டா இது? "அழகி" படத்துல தேவை இல்லாத குத்து பாட்டு மாதிரி..
    இந்த மாதிரி அங்க அங்க ஏதாவது எழுதுனாதான் உங்க கவிதைய படிப்பாங்கன்னு நினைச்சுட்டீங்களா?? திருந்துங்கப்பா..//

    அதுக்கு அர்த்தம் இது இல்ல venkatx5...மனித மனம் மாறிக்கிட்டே இருக்கும் என்பதை பிரதிபலிக்கறதுதான் இந்த கவிதை.. அத தான் சொல்லிருக்கார்... ஒரு கணம் நாய்க் குட்டிக்காக வருத்தப்பட்டாலும் அது மாறி அடுத்தடுத்த நிகழ்வுகளில் மனம் லயித்துவிடுகிறது.. அதான் சிதறல்கள்.. :))

    ReplyDelete
  13. தேங்க்ஸ் ஸ்ரீ, இதை எழுதியதன்போது இருந்த மனநிலை நீங்க அப்படியே பிரதிபளிச்சிருக்கீங்க. நல்ல விளக்கம்.

    venkatx5:
    மனச்சிதறலுக்கு இப்படி ஒரு எடுத்துக்காட்டுதான் கவிதைக்கான சுருக்கமா, சரியாயிருக்கும்ன்னு நெனைக்கறேன்.

    ReplyDelete
  14. இதற்கான கருத்து மூலப் பதிவினில் ( வேர்டுபிரஸ் ) சோலப்பட்டு விட்டது.

    ReplyDelete
  15. இதற்கான கருத்து மூலப் பதிவினில் ( வேர்டுபிரஸ் ) சொல்லப்பட்டு விட்டது.

    ReplyDelete