கடும்நெடி வீசும்
ஒரு பழுப்புநிற மாலையில்
சிமென்ட் பெஞ்சில்
சந்திக்கநேர்ந்தது
விழிமணியில் ரத்தம் தோய்ந்த
என்றோ சந்தித்த அவளை.
சில சில்லுகளே மீதமிருந்த
அவள் இதயத்தை ஒட்டவைக்க
பிரியங்கள் பூசிய
என் மென்சொற்களுக்காக
இளஞ்சூட்டு கண்ணீரை
என் தோளில் கொட்டினாள்.
கொஞ்சம் விசும்பல்கள் தாண்டி
காற்றற்ற மரமாய்
அமைதியாயிருந்தவள்
மெல்லிய புன்னகையோடு
தேங்க்ஸ் சொல்லி மறைந்தாள்.
உறங்கையில்
அத்தனை கடுமையில்லாத
வெறும் காற்றில்லா நாளாகிப்போனது
அன்றைய தினம்.
-
//சில சில்லுகளே மீதமிருந்த
ReplyDeleteஅவள் இதயத்தை ஒட்டவைக்க
பிரியங்கள் பூசிய
என் மென்சொற்களுக்காக
இளஞ்சூட்டு கண்ணீரை
என் தோளில் கொட்டினாள்.//
அசத்தல் :-))
கவிதை உணர்வுமயமா ரொம்ப நல்லா இருக்கு காந்தி.
ReplyDeleteநல்லா இருக்கு :)
ReplyDeletenalla irukku kaanthi
ReplyDeleteநன்றி புனிதா
ReplyDeleteநன்றி யாத்ரா
நன்றி ஸ்ரீமதி
நன்றி மண்குதிரை