Wednesday, August 26, 2009

நாவினாற் சுட்ட வடு

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.

Photo courtesy Imapix.
-

15 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  2. அப்போ நீங்க யாரு?? தோட்டக்காரரா??

    ReplyDelete
  3. தலைப்புக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்.. ;)))))))))

    ReplyDelete
  4. நன்றி யாத்ரா :)

    -

    ஸ்ரீ, ஆமா நான் தோட்டாக்காரந்தான் :) அந்த குறள் தான் இந்த கவிதையோட தலைப்பு. ’நாவினாற் சுட்ட வடு’ ன்னு மாத்திட்டேன், இப்போ பரவால்லியா?

    ReplyDelete
  5. அச்சச்சோ ஏன் தலைப்ப மாத்தினீங்க?? நான் சும்மா தான் கேட்டேன்.. :(((((((((((

    ReplyDelete
  6. நானும் சும்மாதான் மாத்தினேன் ஸ்ரீ :)

    ReplyDelete
  7. நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  8. நன்றி ரவிஷங்கர் :)

    ReplyDelete
  9. athanathan suvai
    athanathan kunam
    nalla irukku gandhi

    ReplyDelete
  10. கவிதையாக மட்டுமே வாசித்தால் நல்ல கவிதை. எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், தீயினாற் சுட்ட புண்ணாக( உங்கள் முந்தய தலைப்பு இது தானே) கருதாமல், கவிதையின் கதாபாத்திரம் மன்னிக்க தயாராக இல்லாதது போன்று தோன்றுவது மட்டுமல்லாமல், அதனை உரம் போட்டு வளர்த்துக்கொண்டு இருப்பதுபோல தெரிகிறது. திரும்ப அவர்களுக்கு அதை திருப்பி தரும் எண்ணத்தில்.

    ReplyDelete
  11. நன்றி மண்குதிரை

    -

    நன்றி மேடி. அவரவர்கள் செய்ததை அவரவர்கள் அனுபவிக்கிறார்கள், இதுதான் சாரம். இதுதான் நடைமுறை இல்லைங்களா, மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தைங்க மேடி.

    ReplyDelete
  12. ஆரம்ப வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது. .... கடைசி வரிகள் ஒட்டிகொள்கிறது.

    அவரவர் பூக்கள்.
    அதனதன் கனிகள்
    அதனதன் சுவை
    அதனதன் குணம்.
    அவரவர்க்கு
    அவரவர் பழங்களை
    பறித்துக் கொடுப்பது மட்டும்
    என் பாடு.

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  13. நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  14. நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  15. நன்றி பிரதீப், புனிதா

    ReplyDelete