நீயற்ற வாழ்வின் சமன்பாடுகளின்
விடைகளுக்காக
நெடுநாள் காத்திராமல்
இறந்துவிட்ட அன்பின்
இறுதிச்சடங்கில்
துக்கமோ
விரக்தியோ
அல்லது
எதுவெனத்தெரியாதவொன்றால்
விம்மி பின்
உடைந்து அழுது
புதைத்து திரும்பும் வழியில்
உனை
தொலைக்கவும்,
சுமக்கவுமியலாமல்
கூனல் விழுந்து
உன் கைக்குள்
சுருங்கிக்கொள்கிறேன்.
உனையும் புதைத்துவிட்டு வருவதாய்
சொல்லிவந்த
என் வீட்டு
கண்ணாடியிடம்
என்ன சொல்ல?
-
கவிதை மிகுந்த வலி காந்தி.
ReplyDeleteமன்னிக்கவும் யாத்ரா
ReplyDeletevali thanthaalum kavithai mozhi arumai
ReplyDeleteநன்றி மண்குதிரை
ReplyDeleteசோகம் வலி கூட சில நேரம் சுகம்தான்!!!
ReplyDeleteKashtamda
ReplyDelete