- உனை பிரியும் நேற்றே
துவங்கிவிட்ட
இன்றய அஸ்தமனத்தில்
ஒருசில கண்ணீரே
வைத்துள்ளேன்.
எனக்காகயிருக்கட்டுமவை!
- நுகர்ந்ததும்
உணவில்லை
என்றுணர்ந்த எதோவொரு
ஐந்தறிவு போல்
அலைக்கழிக்கப்படுகிறது
என் வாழ்வு.
நுகர்ந்த மூச்சில்
ஆடிக்கொண்டிருக்கிறாய் நீ.
யௌவன பொழுது
நிறைந்த கோப்பைக்குள்
வழிந்து நிறைகிற
உன் நினைவுகள்
தொலைந்த தேவகணத்தில்
என்னுள்
நுழைந்துகொள்ளும்
அருகிலிருந்து எனைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
நான்.
-
இக்கணம் இக்கவிதை நன்றாக இருக்கிறது காந்தி
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு காந்தி.
ReplyDeleterasiththeen gandhi
ReplyDeleteஎன்னுள்
ReplyDeleteநுழைந்துகொள்ளும்
அருகிலிருந்து எனைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
நான்.
வெளியிலிருந்து உள்ளே பார்க்கிற இந்த கற்பனையும் அது சாத்திய படக்கூடிய மனமும் எத்தனை அருமை
நன்றி நந்தா
ReplyDeleteநன்றி யாத்ரா
நன்றி மண்குதிரை
நிச்சயமாக அருமை மேடி
மிக நேர்த்தியான வார்த்தை கோர்ப்பு :-)
ReplyDeleteநன்றி புனிதா
ReplyDeleteஅருமை
ReplyDelete