Wednesday, July 29, 2009

ஏழு கால் சிலந்தி

பெண்மையின் மென் ஸ்பரிசங்களின் மீது
என்றோ விழுந்த நீள் உறக்கத்தில்
திருடுபோகிறேன்.
புயல் கடந்த இடமாகிப்போனவொரு இடத்தில்
உடைத்தெறிய முடியாத பொழுதில்
அவளுள் நுழைந்து தாழிடும்
இரக்கமற்ற மௌனங்களில்
வாழ்தலின் கனம்
பிடுங்கித்தின்னும
என் ஒற்றைக்கண் பூனை
வெறுமை மிகு பாதாளங்களில்
ரத்தம் வழிய இறந்துகிடக்கிறது.

மேகமூட்ட வானின் விளிம்பு தாண்டிய நீர்
உச்சந்தலை நனைக்கையில்
உலகின் சூட்சுமங்களில் ஒன்றை அறிகிறேன்.
திரும்பத் தீண்டக்கூடும் ஸ்பரிசத்தை
காதலிக்கக்கூடும்.
அதுவரை,
களவு போனவைகள்
தொலைந்தவைகளாகக்கூடும்
இதயமும் சேர்த்து...

-

9 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்கு காந்தி, என்னப்பா ரொம்ப நாளா காணோம்.

    ReplyDelete
  2. நன்றி யாத்ரா, பயணங்களால் எழுத முடியல இனிமேதான் எழுத ஆரம்பிக்கணும் :)

    ReplyDelete
  3. மீண்டும் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள், மகிழ்ச்சி!!

    திரும்பத் தீண்டக்கூடும் ஸ்பரிசத்தை
    காதலிக்கக்கூடும்.

    நல்ல வரிகள்! அப்படியே நடக்கட்டும்!

    ReplyDelete
  4. உங்கள் வாழ்த்துக்கு நன்றி மேடி :)

    ReplyDelete
  5. அருமை :-)

    ReplyDelete
  6. "புயல் கடந்த இடமாகிப்போனவொரு இடத்தில்
    உடைத்தெறிய முடியாத பொழுதில்
    அவளுள் நுழைந்து தாழிடும்
    இரக்கமற்ற மௌனங்களில்
    வாழ்தலின் கனம்"

    இந்த வார்த்தைகளை கோர்த்திருப்பது அருமை.

    ஒரு சோகம் தொத்திகுது.

    ReplyDelete