
சபித்தபடி
இதயம் கழற்றியெறியப்பட்டதாகவோ
அல்லது
வேறதையும் உணர்த்திப் போனதாகவோ
தெரியவில்லை
வெளிறியிருக்கும்
அந்த நாட்களின்
பின் மதியப்பொழுதில்
நாட்குறிப்பின் முடிந்துபோன பக்கமொன்றினுள்
பதித்துவைக்கிறேன்
உமிழமுடிந்த அனைத்து உணர்ச்சிகளையும்
எழுதாத பேனாவில்
பின்னொரு நாளில் அழுவதற்காக.
மறுபடி, மறுபடி
அவளை பார்க்க நேரிடும்
சூழலின் அபத்தங்களை
குரூரமக்கிவிடுமோ
பிரிவுப்பேச்சுகள்
பிரியும்வரை?
- உயிரோசையில் பிரசுரமான கவிதை