Tuesday, December 09, 2008

தன்வினை

ப்ராஜெக்ட் முடிக்க
ஓவர் டைமில் வேலைசெய்து திரும்பும் அவள்
பேச்சுத்துணைக்கு போன் செய்திருந்தாள்.
வழிதோறும் நடந்தவைகளை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கையில்
எதிர்ப்பட்ட
நொண்டி பிச்சைக்காரன்,
பீடி பிடிக்கும் ஆட்டோக்காரன்,
மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்
மேல் பட்டன் போடாத எவனோஒருவனென
எவருமே
நல்லவராய் தெரியவில்லையெனக்கு
அவள் வீடு சேரும்வரை.

அன்றொருநாள்
இரவு பதினொரு மணிவாக்கில்
இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து
மாநிறமாய்
நீள்வட்ட முகத்தில்
அழகிய உதட்டுடன்
எனைப்பார்த்ததும்
மிரண்டு வேகமாய் நகர்ந்த எவளயோ
எதேச்சையாய் நினைவுக்கு வந்தது.

சட்டென்று
இந்த இரு சம்பவத்துக்கும்
சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டது
உள்ளிருந்து ஏதோ
 

4 comments:

  1. நன்றி ஸ்ரீமதி :)

    ReplyDelete
  2. இந்தக் கவிதை முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் போட்டேன் என்று நினைத்தேன். தாமதமான பின்னூட்டத்தை மன்னித்துவிடு.

    அழகான கவிதை. நல்லா வந்திருக்கு. உயிரோசைக்கு வாழ்த்துக்கள். காந்தி, நீ இன்னும் நிறைய எழுத வேண்டும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. @அனுஜன்யா

    வாழ்த்துக்கு நன்றி அனுஜன்யா. என் Wordpress ப்ளாக்ல, நீங்க ஏற்கனவே இந்த கவிதைக்கு கமெண்ட் போட்டுடீங்க. இங்கையும் கமெண்ட் போட்டதுக்கு நன்றி :)

    சொல்லிடீங்கில்ல, அதிகமா எழுத ட்ரை பண்றேன் :)

    காந்தி

    ReplyDelete