கூர்தலறம்

Tuesday, December 09, 2008

நீ, நான் மற்றும் சிவப்பு ஆறு

அழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது

முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது.

  • உயிரோசையில் பிரசுரமான கவிதை.

Share |
Labels: உயிரோசை, கவிதை

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு
Online-ல் வாங்க படத்தை கிளிக் செய்யவும்

பிடித்தவை

பதிமூன்று அற்புத விளக்குகள்


எங்கள் வீட்டில் இரண்டு விளக்குகள் இருக்கின்றன

ஒன்று

அப்பா சாவதற்காக வாங்கிய

பூச்சிமருந்து பாட்டிலால் ஆனது

அவரைச் சாத்திவைத்திருந்த அதே மாடத்தில்தான்

இக்கணம் அது நின்று எரிகிறது

சர்க்கார் உடுப்பில் வந்தவர்கள்

வைக்கோல் நிறத்திலிருந்த வயற்பத்திரத்தைப் பிடுங்கிப்போனார்கள்

வண்டிச்சக்கர மை அழிவதற்கு முன்

பெருவிரலை வெறிநாய்க்குக் கடிக்கக் கொடுத்தார் அப்பா

இல்லாத வெள்ளாமைக்கு பூச்சிமருந்து வாங்கி

நான்கு விரல்களால் ஏந்திக் குடித்தார்

சாக்குத் தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு

கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயுமாக

இந்த விளக்கு உருவானது

இதன் வெளிச்சத்தில்தான் நான்

உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் படித்தேன்

இவற்றைக்கொண்டு

‘அப்பா எப்படிச் செத்தார்?’ என்று எழுதமுடியுமென்றாள் அம்மா

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது

‘எலே ராசா.. இதுக்குள்ளதான்யா உன் தலயெழுத்து இருக்கு’ என்றாள்

எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது

இரண்டாவது விளக்கைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்

இது

முதலும் கடைசியுமாக அம்மா குடித்த

பிராந்தி பாட்டிலால் ஆனது

அடுப்புக்கு அருகே அதன் நிரந்தர இடம்

அம்மா தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்

நானும் சேர்ந்துகொண்டேன்

யார் யாரோ காரணம் கேட்டார்கள்

ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை

அரைத்தூக்கத்தில் அவளாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்

“எஞ் சேல பூவையெல்லாம் ராத்திரியில் வித்துப்புட்டேன்

கொப்பங் கடனுக்குத்தான் சாவாம செத்துப்புட்டேன்

உடுத்தாலும் அம்மணம்தான்

உசிரு இருந்தாலும் நாம்பொணந்தான்...”

இருமல் மருந்துகளைக் கொண்டு

நுரையீரலோடும் மூச்சுக்குழாயோடும் அன்றாடம் மல்லுக்கட்டுகிறாள்

இந்த வருஷம் மட்டும் 11 பாட்டில்கள் (எல்லாம் வடிவானவை)

எங்கள் ஊர்ப்பக்கம் நீங்கள் வந்தால் பார்க்கலாம்

கிழக்குத்தெரு குடிசைகளின் விளக்குத் திரிகளில்

பிரகாசித்துக் கொண்டிருப்பவை அம்மாவின் பிராயத்துக் கண்கள்

அதில்தான் எவ்வளவு ஒளி!


- வெய்யில் (விகடன் தடம், 01.11.2016)

RSS

RSS
Subscribe to கூர்தலறம்

Translate

Followers

About Me

TKB காந்தி
View my complete profile

Labels

  • photography (6)
  • அறிவியல் (9)
  • உயிரோசை (4)
  • கட்டுரை (5)
  • கதை (1)
  • கவிதை (45)
  • கற்பனை (1)
  • கேன்சர் (4)
  • பரிணாமம் (4)
  • புனைவு (1)

Blog Archive

  • ►  2025 (2)
    • ►  August (1)
    • ►  June (1)
  • ►  2018 (4)
    • ►  August (1)
    • ►  July (3)
  • ►  2017 (1)
    • ►  March (1)
  • ►  2016 (2)
    • ►  July (1)
    • ►  February (1)
  • ►  2015 (2)
    • ►  October (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  February (1)
  • ►  2011 (6)
    • ►  November (1)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2010 (6)
    • ►  December (3)
    • ►  June (1)
    • ►  February (2)
  • ►  2009 (27)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (1)
    • ►  May (1)
    • ►  April (3)
    • ►  March (2)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ▼  2008 (12)
    • ▼  December (11)
      • பிரிவுப்பேச்சுகள்
      • சிதறல்கள்
      • தன்வினை
      • சுருக்கங்கள்
      • தனிமை
      • மகான்களின் புகைப்படங்கள்
      • நேயர் விருப்பம்
      • And then...
      • நீ, நான் மற்றும் சிவப்பு ஆறு
      • ஆழமாய்ப் புதைத்தல்
      • திரும்பியிருக்கலாம்!
    • ►  April (1)

Rights & Disclaimer

All rights reserved.

Disclaimer:
The photographs I post here are mine unless stated beneath the photograph with relevant sources as 'photo courtesy'. I try to link the original source of the photos. Copyright is to all the respective websites/photographers and they will be removed in case of any copyright violation.

Visitors

Total Pageviews

21,086
TKB Gandhi. Powered by Blogger.