Thursday, December 18, 2008

பிரிவுப்பேச்சுகள்

தனித்தனியே பொறுக்கியெடுத்து
சபித்தபடி
பிரிவை பேசும்போது
அடிவயிற்றைக் கீறிப்பிளந்ததாகவோ
உயிர்கிழிக்க தொடங்கியதாகவோ
இதயம் கழற்றியெ
றியப்பட்டதாகவோ
அல்லது
வேறதையும் உணர்த்திப் போனதாகவோ
தெரியவில்லை

வெளிறியிருக்கும்
அந்த நாட்களின்
பின் மதியப்பொழுதில்
நாட்குறிப்பின் முடிந்துபோன பக்கமொன்றினுள்
பதித்துவைக்கிறேன்
உமிழமுடிந்த அனைத்து உணர்ச்சிகளையும்
எழுதாத பேனாவில்
பின்னொரு நாளில் அழுவதற்காக.

மறுபடி, மறுபடி
அவளை பார்க்க நேரிடும்
சூழலின் அபத்தங்களை
கு
ரூரமக்கிவிடுமோ
பிரிவுப்பேச்சுகள்
பிரியும்வரை?


25 comments:

  1. //தனித்தனியே பொறுக்கியெடுத்து
    சபித்தபடிபிரிவை பேசும்போதுஅடிவயிற்றைக் கீரிப்பிளந்ததாகவோ
    உயிர்கிழிக்க தொடங்கியதாகவோ
    இதயம் கழற்றியெரியப்பட்டதாகவோ
    அல்லது
    வேறதையும் உணர்த்திப் போனதாகவோ
    தெரியவில்லை//

    பிரிவு பற்றின பேச்சு உங்களுக்கு ஒண்ணுமே உணர்த்தலியா?? ஒருவேள பிரிவு ஏற்கனவே தெரிந்தது தானோ?? இருந்தாலும் வரிகளின் ஆழம் நல்லா இருந்தது.. :))

    ReplyDelete
  2. //வெளிறியிருக்கும்
    அந்த நாட்களின்
    பின் மதியப்பொழுதில்
    நாட்குறிப்பின் முடிந்துபோன பக்கமொன்றினுள்
    பதித்துவைக்கிறேன்
    உமிழமுடிந்த அனைத்து உணர்ச்சிகளையும்
    எழுதாத பேனாவில்
    பின்னொரு நாளில் அழுவதற்காக.//

    அப்படியே இங்கயும் கொஞ்சம் பதிக்கறது அந்த கவிதைகள.. நாங்களும் படிப்போம்ல.. ;)))))

    ReplyDelete
  3. //மறுபடி, மறுபடி
    அவளை பார்க்க நேரிடும்
    சூழலின் அபத்தங்களை
    குருரமக்கிவிடுமோ
    பிரிவுப்பேச்சுகள்
    பிரியும்வரை?//

    சேர்ந்திருக்கும் பொழுதுகளில் பிரிவின் பேச்சுக்கள் பேசாமலிருத்தல் நலம்....!!

    ReplyDelete
  4. நாந்தான் ஃபர்ஸ்ட் :)))))

    ReplyDelete
  5. @ஸ்ரீ

    வரிகள் பிடித்ததில் மகிழ்ச்சி :)

    உமிழமுடிந்த உணர்ச்சிகளை எழுதாத பேனாவில் எழுதிட்டேனா அதுனால இங்க பதிக்க முடியாதுங்க ஸ்ரீ :)

    ReplyDelete
  6. அட்டகாசம் பண்றீங்க காந்தி.. செம கவிதை..

    ReplyDelete
  7. @சரவணன்

    Photo courtesy: deviantART, அழகா நெறைய photos இருக்கு அங்க.

    உங்களுக்கு கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு. தனித்தனியே பொறுக்கியெடுத்து வார்த்தைகளை கோர்த்திருக்கியெடா
    படிச்சா சோகமாதான் இருக்கு. ஒருவேளை சோகமா இருக்கறதாலதான் இந்தமாதிரி-லாம் தோணுதோ!
    என்னவோ போ!
    அந்த பக்கம் என்ன நடக்குது-னு தெரியல.
    (Give some energetic poem man)

    ReplyDelete
  9. @பிரதீப்,

    பிடிச்சிருக்கா மாப்ள சந்தோஷம். சோகமாயிருக்கறதுக்காக எழுதல அப்பறம் இங்க ஒண்ணும் நடக்கல (பிரச்சனையில்லன்னு சொல்றேன்). எனர்ஜிடிக் கவிதையா? கண்டிப்பா ட்ரை பண்றேன் :)

    ReplyDelete
  10. காந்தி, நல்லா இருக்கு. சகாரா தென்றல் என்றொரு வலைப்பூ உள்ளது. (saharathendral.blogspot.com) அழகியல் சார்ந்த கவிதை/புனைவுகள் என்று அழகான வலைப்பூ. It may be sheer coincidence. அவரின் சமீப பதிவு பிரிவின் துயரைச் சொல்கிறது, பெண்ணின் கோணத்திலிருந்து. அதற்கு எதிர்வினை போல் இருக்கிறது உன் கவிதை.

    அனுஜன்யா

    ReplyDelete
  11. @அனுஜன்யா

    தேங்க்ஸ் அனுஜன்யா. 'சகாரா தென்றல்' நல்லா இருக்கு, இதுக்கு முன்னாடி அங்க போனதில்ல, அவர் எழுதிய பிரிவு பத்தின புனைவு நல்லயிருந்திச்சு, நீங்க சொன்ன மாதிரி ரெண்டும் coincident, அவர் எனக்கு பின்னாடிதான் அந்த போஸ்ட் போட்டிருக்கார் :)

    அவர் அழகா எழுதறார், 'சகாரா தென்றல்' அறிமுகம் செஞ்சதுக்கு தேங்க்ஸ்ங்க :)

    காந்தி

    ReplyDelete
  12. Gandhi.. உயிரோசையில் இக்கவிதை வந்து இருக்கிறது.. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  13. @சரவணன்,

    தேங்க்ஸ்ங்க. உங்களின் கவிதை பிரசுரத்துக்கும் வாழ்த்துக்கள். கலக்குங்க :)

    காந்தி

    ReplyDelete
  14. இந்த‌ க‌விதையை என் தோழ‌ர் ஒருத்த‌ர் என‌க்கு அனுப்பி இருந்தார். அவ‌ர்கிட்ட‌ சிலேகித்தேன் அருமை அருமை என்று உங்க‌ க‌விதைன்னு தெரியாம‌ போச்சு. ம்ம்ம். ந‌ல்லா வ‌ந்திருக்கு கவிதை.

    ReplyDelete
  15. ஹலோ, இப்படி நீயும் சராவும் மட்டும் பரஸ்பர 'முதுகு சொறிந்தால்' எப்படி? நாங்களும் உயிரோசையில் எழுதுவோமப்பு. தம்பி கார்க்கி கதை கூட வந்திருக்கு. வாழ்த்துக்கள் காந்தி மற்றும் சரா.

    அனுஜன்யா

    ReplyDelete
  16. @மின்னல்:

    கிண்டல் பண்றீங்களா மின்னல் :) உங்களுக்கு அழகியல் கவிதைகள் பிடிக்கும்னு உங்களோட ப்ளாக் ல தெரிஞ்சது. உங்களோட நுட்பமான கவிதை ஆராய்ச்சி நல்லா இருக்குங்க, சில டைம் இப்படியும் இருக்குமோன்னு யோசிக்கவைக்கற ஆழமான கருத்துகள்.

    @அனுஜன்யா:

    இந்தவாரம் எனக்கு தெரிஞ்சவங்க நெறைய பேர 'உயிரோசை'ல பாத்தப்ப சந்தோசமா இருந்துச்சு. உங்க கவிதை சூப்பர். வழக்கம்போல கலக்கறீங்க :) உங்க கவிதைங்கெல்லாம் பொறுமையா படிக்கனும்ங்க்றதால உங்க இன்னொரு கவிதைக்கும் இன்னும் கமெண்ட் போடல, வரேன் சீக்கரமா :)

    காந்தி

    ReplyDelete
  17. நல்லா இருக்கு காந்தி. நானும் இந்த மாதிரி டைப்ல முயற்சி பண்ணனும்னு ரெண்டு வருடமா யொசிச்சுட்டிருக்கேன்.

    ReplyDelete
  18. தேங்க்ஸ் ரவி. நீங்க எழுதறது ரொம்ப modern, அழகியல் கவிதைய முயற்சி பண்ணீங்கனா ரொம்ப சூப்பரா இருக்கும். ஒன்னு எழுதுங்களேன்.

    ReplyDelete
  19. என்ன காந்தி.. ஆளையே காணோம்..??

    ReplyDelete
  20. உமிழமுடிந்த அனைத்து உணர்ச்சிகளையும்
    எழுதாத பேனாவில்
    பின்னொரு நாளில் அழுவதற்காக.///

    நல்ல உணர்ச்சிகரமான கவிதை>>
    பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    தேவா..

    ReplyDelete
  21. @சரவணன்,

    வேலை காரணமா வெளியூர் போயிட்டதுனால எதுவும் எழுதமுடியலங்க, உங்க blog-க்கும் வரமுடியல. இப்போ வந்தாச்சு, இனிமே கலக்கிடலாம் :)

    ReplyDelete
  22. @தேவா,

    நன்றி கவிதைக்கும், பொங்கல் வாழ்த்திற்கும். "தேவன் மாயம்" - வித்தியாசமான பெயர். உங்க blog-அ படிக்கணும், வரேன் :)

    ReplyDelete
  23. //மறுபடி, மறுபடி
    அவளை பார்க்க நேரிடும்
    சூழலின் அபத்தங்களை
    குரூரமக்கிவிடுமோ
    பிரிவுப்பேச்சுகள்
    பிரியும்வரை? //

    பிரிவின் உணர்வைச் சொல்லும்
    அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள் TKB காந்தி...

    ReplyDelete
  24. @புதியவன்,

    நன்றி, உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்

    காந்தி

    ReplyDelete