Tuesday, February 24, 2009

சொற்கொலை




நம் பிரிவின்முன் ரயிலேறியபோது
நீ சொன்ன சொற்கள்
என் எல்லா ரயிலுக்கான காத்திருப்பிலும்
பிளாட்பாரமெங்கும் சிதறிக்கிடக்கும்.
ரணம்கூட்டும் சொற்கள்மட்டும் பொறுக்கியெடுத்து
தண்டவாளத்தில் கொலைசெய்யவைப்பேன்.
ரயிலேற்றி கொலைசெய்யப்பட்டபின்னும்
பயணம்முழுவதும் இம்சித்துக்கொண்டிருக்கும்
மரண ஓலமாய்
உன் நினைவுகளோடு...


9 comments:

  1. //ரணம்கூட்டும் சொற்கள்மட்டும் பொறுக்கியெடுத்து
    தண்டவாளத்தில் கொலைசெய்யவைப்பேன்.//

    மிக அருமையான கற்பனை...

    ReplyDelete
  2. சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு :)) எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை :))

    ReplyDelete
  3. நன்றி புதியவன், ஸ்ரீமதி :)

    ReplyDelete
  4. ரயிலேற்றி கொலைசெய்யப்பட்டபின்னும்
    பயணம்முழுவதும் இம்சித்துக்கொண்டிருக்கும்
    மரண ஓலமாய்
    உன் நினைவுகளோடு...


    காதல் என்பது சாகாதது என்பதற்கு இந்த வரிகள் ஒரு சான்றாக தெரிகிறது. மன ஓட்டங்களை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்!!

    ரயிலேரியபோது ""ரயிலேறியபோது"" மற்றும் சொற்கொலை "சொற்க்கொலை"" என்று இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்!!

    ReplyDelete
  5. இந்த கவிதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மேடி.

    ’ரயிலேறியபோது’ என்று மாற்றிவிட்டேன். நன்றி :)

    ’சொற்க்கொலை’ என்பதே சொற்கொலைன்னு இதன் பழைய பதிப்பில் அருட்பெருங்கோ சொல்லியிருந்தார், அப்புறம் ’கவிதாயினி’ ஸ்ரீமதியும் அப்படியே சொன்னதால ’சொற்கொலை’ன்னே வச்சுட்டேன் :)

    ReplyDelete
  6. நல்லா இருக்கு காந்தி.வாழ்த்துக்கள். ஒரு சின்ன சிறுகதை முயற்ச்சியுங்களேன்.

    ReplyDelete
  7. சீக்கிரம் வேறு கவிதை போடவும் அல்லது போட்ட கமெண்ட்டுக்காவது ரிப்ளே பண்ணவும் ;)))))

    ReplyDelete
  8. நன்றி ரவிஷங்கர். சிறுகதை நிச்சயமா ட்ரை பண்ணறேங்க. நீங்க படிச்சிட்டு கருத்து சொல்லணும் :)

    ---

    ’கவிப்புயல்’ ஸ்ரீ என்கிட்ட கவிதை கேக்கறது பெருமையாயிருக்கு. என் அடுத்த கவிதை உங்களுக்காக :)

    ReplyDelete
  9. "தண்டவாளத்தில் கொலைசெய்யவைப்பேன்.
    ரயிலேற்றி கொலைசெய்யப்பட்டபின்னும்"

    நினைவுகள் எப்போதும் கொலையுண்ட பின்னும் வாழுபவைதானே....!!

    சாந்தி

    ReplyDelete