Sunday, February 08, 2009

மெல்லக்கொல்லும்விஷம்


என் மனைவிக்கான
கண்மூடிய
அந்தரங்க நேரங்களில்
அபத்தமாய்
நுழைந்துவிடுகிறது
ஒரு நொடிக்குமுன் கூட
ஞாபகமில்லாத
உனைப்பற்றியவைகள்

எதற்காகவோ...
எதையும் யூகிக்கத் தோன்றவில்லை.
நீ எனை விட
மகிழ்ச்சியாயிருப்பதாய் நினைத்துக்கொண்டு
முத்தமிடுகிறேன்
நொடிதோறும் என்னையே
நினைத்துக்கிடக்கும்
மனைவியை.

பின்னொருநாள்
உனை மறந்தது நினைவிலில்லாமல்
காலண்டரின் மார்கழித்தேதிகளிலோ,
கோவிலின் லௌட் ஸ்பீக்கர்
பக்திப் பாடல்களிலோ
அல்லது
என் மனைவியின்
விடியற்காலை பூசணிப்பூ
கோலத்திலோ தெரிந்துவிடும்
உன் பிறந்தநாள்.

நிர்ணயம் செய்யப்பட்ட
வருடத்தின் பண்டிகைகள்
போலவே சீரானவொரு
இடைவெளியில்
வந்துபோய்க்கொண்டேயிருக்கிறாய்.
பிரியும்போது
உனை மறக்கத்தேய்க்கும்
களிம்போ, மாத்திரையோ
கேட்டு வாங்கியிருக்கலாம்
உன்னிடம்.
---

20 comments:

  1. நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள். வித்தியாசமான சிந்தனை. சிறந்த படைப்புக்களில் உங்களது படைப்பும் ஒன்று. உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  2. மிக அழகான நினைவுகள், நன்றாக உள்ளது, உள்ளிருக்கும் வலியும் புரிகிறது ,வரமாய் சாபமாய்

    ReplyDelete
  3. அருமை
    அருமை
    நல்ல & உணர்வுமிக்க சிந்தனை

    ReplyDelete
  4. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  5. விஷம்னா அப்படிதான் இருக்கும் ;))

    ReplyDelete
  6. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

    ReplyDelete
  7. //பிரியும்போது
    உனை மறக்கத்தேய்க்கும்
    களிம்போ, மாத்திரையோ
    கேட்டு வாங்கியிருக்கலாம்
    உன்னிடம்.//

    அட்டகாசம் காந்தி.. செம பின்னலா இருக்கு.. AWESOME..

    ReplyDelete
  8. நன்றி கவிக்கிழவன்.

    ---

    நன்றி ஜீவா

    ---

    ரொம்ப தேங்க்ஸ் மச்சான்

    ---

    ஸ்ரீ, நானே சோகமா எழுதிருக்கேன் நீங்க அது அப்படித்தான்னு சர்டிபிகேட் வேற குடுக்கறீங்க ;)

    ---

    தேங்க்ஸ் சரவணன். இன்னும் இல்லைங்க, இது சும்மாநாச்சிக்கும் :)

    ReplyDelete
  9. //TKB காந்தி said...
    ஸ்ரீ, நானே சோகமா எழுதிருக்கேன் நீங்க அது அப்படித்தான்னு சர்டிபிகேட் வேற குடுக்கறீங்க ;)//

    உண்மை கசக்கும் ;))))

    ReplyDelete
  10. //நீ எனை விட
    மகிழ்ச்சியாயிருப்பதாய் நினைத்துக்கொண்டு
    முத்தமிடுகிறேன்
    நொடிதோறும் என்னையே
    நினைத்துக்கிடக்கும்
    மனைவியை.//

    உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படித்தியிருக்கும் விதம் அருமை...

    ReplyDelete
  11. நன்றி புதியவன் :)

    ReplyDelete
  12. "உனை மறக்கத்தேய்க்கும்
    களிம்போ, மாத்திரையோ
    கேட்டு வாங்கியிருக்கலாம்
    உன்னிடம்" - அப்படியேதும் இருக்கிறதா?
    கவிதை அழகு...

    வேண்டுகோள் - ஆங்கில வார்த்தைகளை தமிழ் கவிதைகளில் சேர்ப்பதை தவிருங்கள்

    நன்றி!

    ReplyDelete
  13. நன்றி முத்துசாமி,

    நிச்சயம் தவிர்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  14. //TKB காந்தி said...
    திருப்பியும் திருப்பியும் அப்படியே சொல்லறீங்க ஸ்ரீ :(//

    இல்லையே... இந்த முறை வேற வார்த்தைகள் தானே யூஸ் பண்ணிருந்தேன்?? (juz kidding.. ;)))

    ReplyDelete
  15. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  16. நன்றி ஜெயப்பிரகாஷ்.

    ReplyDelete
  17. சோகமாக இருந்தாலும், மிக அழகிய வரிகள். சராவுக்குப் போட்டியா - காதல் தோல்விக் கவிதையில்? :))

    அனுஜன்யா

    ReplyDelete
  18. நன்றி அனுஜன்யா. சராவுக்குப் போட்டியா இல்லைங்க. சராவுக்கு இணை சராமட்டுமே.

    ReplyDelete