Sunday, February 15, 2009

ஒரு வேளை


நமக்கான பாலடயாளங்கள்
மறைத்தொழித்து
உன்னுடன் ஒத்ததிர்ந்து துடிக்கிற
இதயமாகவேயிருக்க
இன்றும்விரும்புகிறேன்.

எப்போதாவது
நீ துடித்தெழுந்துணரும்
நொடிப்பொழுதில்
உன் எல்லைதாண்டி
எவ்வளவுதூரம்
சென்றிருப்பேனென்று
நிச்சயமாய்த் தெரியவில்லை...
கூப்பிடும் தூரத்தில் தென்பட்டால்
கூப்பிட்டுப்பார்
ஒரு வேளை
நான் திரும்பலாம்.

14 comments:

  1. //கூப்பிடும் தூரத்தில் தென்பட்டால்
    கூப்பிட்டுப்பார்
    ஒரு வேளை
    நான் திரும்பலாம்.//

    :)))

    ReplyDelete
  2. //உன் எல்லைதாண்டி
    எவ்வளவுதூரம்
    சென்றிருப்பேனென்று
    நிச்சயமாய்த் தெரியவில்லை...//

    :((

    ReplyDelete
  3. //நீ துடித்தெழுந்துணரும்
    நொடிப்பொழுதில்//

    Azhagaa irukku.. :))

    ReplyDelete
  4. நல்லா இருக்கு காந்தி.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. கவிதை பிடிச்சதில் சந்தோஷம் ஸ்ரீ. நீங்கதான் என் ஒரே போஸ்ட்டில் அதிகமா கமெண்ட்டியவர், நன்றி :)

    ---

    ரொம்ப சந்தோஷங்க அனுஜன்யா :)

    ReplyDelete
  6. கவிதை அருமை

    //நீ துடித்தெழுந்துணரும்
    நொடிப்பொழுதில்//

    வரிகள் அழகு...

    ReplyDelete
  7. நன்றி புதியவன் :)

    ReplyDelete
  8. Is it "பாலடயாலங்கள்" or
    பாலடயாளங்கள்?

    I feel, the term "இதயமாகவேயிருக்க" sounds better if it is to be "இதயமாகவேயிருக்கவே"

    Nanri!

    ReplyDelete
  9. நன்றி முத்துசாமி சுட்டிக்காட்டியதற்கு, இப்போ 'பாலடயாளங்க'ளா மாத்திட்டேன்.

    ReplyDelete
  10. கவிதை அருமையோ அருமை...
    காலத்தை தாண்டி வாழும் காதல் வழியுது..

    'ஒத்ததிர்ந்து துடிக்கிற இதயம்'
    'துடித்தெழுந்துணரும் நொடிப்பொழுது'

    இந்த சொற்கள் அருமை.

    ('பாலடையாளங்கள்'?)

    ReplyDelete
  11. //பாலடயாளங்கள்//

    இதுக்கு அர்த்தம் என்ன காந்தி??

    ReplyDelete
  12. தேங்க்ஸ் பிரதீப் மச்சி :)

    சரவணன்,
    பால் + அடையாளங்கள் = பாலடையாளங்கள்

    ReplyDelete