Wednesday, December 09, 2009

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு



டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு 'அகநாழிகை' பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளில் என் கவிதைத் தொகுப்பும் வெளிவர உள்ளது, தலைப்பு 'கூர்தலறம்.' இந்த தொகுப்பு எனக்கு ஒரு சுவையான ஆச்சர்யம். இந்த தொகுப்பை வெளியிட உதவிய தோழி லாவண்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'அக‌நாழிகை' பொன்.வாசுதேவ‌ன் அவர்களின் கவிதைகளின் வாசகன் நான், அவரின் 'அக‌நாழிகை' மூலம் இந்த தொகுப்பு பிரசுரமாவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி, அவருக்கு என் நன்றிகள் கோடி. என் கவிதைகளை திருத்தி, செதுக்க உதவிய தோழி ஸ்ரீமதிக்கும், நண்பன் பிரதீப் குமாருக்கும், ஏனைய வலை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்:
கவிதைகள்:
1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)
4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

சிறுகதைகள்:
1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

கட்டுரைகள்:
1. பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)


புத்தக வெளியீட்டு விழா:



நாள்: டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இட‌ம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, 
கே.கே.நகர் (மேற்கு) (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேம். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். நேரடியாக வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் aganazhigai@gmail.com.

அனைவரும் வருக !

6 comments:

  1. Vazhthukkal.

    Innum pala noolkal unngalidam irunthu vara vaazthukkal

    ReplyDelete
  2. வாழ்த்துகள் காந்தி, உங்களுக்கும் அகநாழிகைக்கும், விழாவில் சந்திப்போம்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் காந்தி.. மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறது.. :)
    இன்னும் மென்மேலும் வளருங்கள்.

    ReplyDelete
  4. congrats ganthi.
    happy to know that ur works are getting published.
    i wish u should publish more.
    all the best

    ReplyDelete
  5. மிக்க நன்றி மேடி

    நன்றி யாத்ரா, தவிற்க்கவியலாத காரணத்தால் ஊரிலிருந்தும் விழாவிற்க்கு வர இயலவில்லை, உங்களையும் சந்திக்கவியலவில்லை, மன்னிக்கவும்.

    நன்றி பிரதீப் :)

    நன்றி சரவணா, அப்பாடா எவ்ளோ நாளாகுது :)

    நன்றி ஜெய் :)

    ReplyDelete