துர்நாறும் இந்த பொழுதில்
குறித்துக்கொள்கிறேன்
நீங்கள் எங்களுக்கு செய்தவற்றை
அதில் எழுதாத மைதீட்டிய பக்கங்களும்
குறிப்புகளே.
வலிமை மட்டுமே பிரதானமான பின்
நீங்கள் இளைப்பாறும் கணத்தில்
எங்கள் பிள்ளைகளுக்கு
இந்த குறிப்புகளோடு கற்பிப்போம்
கொலை, வன்புணர்ச்சி
இன்னபிற வலியனவைகள்.
ஒரு மயிர்கூச்செறியும் கணத்தில்
பெருகும் எங்கள் வெளிச்சம்
வழிகாட்டுதலின்பாற்பட்டதல்ல.
அப்போது
வெற்றிக்கான எங்கள் குறியீடாய்
நீங்கள் எங்களுக்குச் செய்தவைகளோ
அல்லது
ரணப்பொழுதில் நாங்கள் யோசித்தவைகளோ...
அதுவரை
சமாதானமென்பது
அகராதியில்
'ச' வரிசையில் வருமொரு
சொல் மட்டுமே.
//அதுவரை
ReplyDeleteசமதானமென்பது
அகராதியில்
'ச' வரிசையில் வருமொரு
சொல் மட்டுமே.//
பொட்டில் அடித்தது போல் இருந்தது இந்த வரிகள்...
நல்ல கவிதை காந்தி..
//அதுவரை
ReplyDeleteசமதானமென்பது
அகராதியில்
'ச' வரிசையில் வருமொரு
சொல் மட்டுமே.//
ரொம்ப சூப்பர் :)))
இப்படி கவிதை எழுத எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்...
ReplyDeleteவன்முறை ! நல்லா இருக்கு காந்தி.
ReplyDeleteஇந்த கடைசி பத்திதான் அந்த போராளியின் உக்கிரத்தை காட்டும். நன்றி புதியவன் :)
ReplyDelete---
உங்க ரேஞ்ஜிக்கு இந்த கவிதைங்க கம்மி ஸ்ரீ :)
---
நன்றி மண்குதிரை :)
நல்லா இருக்கு காந்தி கவிதை, ஆனா போர் தான் எல்லாத்துக்கும் தீர்வா. தற்காத்துக் கொள்ள வேணும், அவசியப்படுகிறது எதிர்த்து நிற்பது. போராளியின் ஆயுதங்களை போராளி தீர்மானிப்பதில்லை, எதிரிகளே தீர்மானிக்கிறார்கள், எனப் படித்த நினைவு வருகிறது.
ReplyDeleteநன்றி யாத்ரா. போர் தான் எல்லாத்துக்கும் தீர்வான்னு தெரியலங்க . இது, ஒரு வலிமையான இனம் தான் நிலைத்து நிற்க்கும்ங்றத உணரும் ஒடுக்கப்பட்ட இனத்தலருந்து உருவான திவிரவாதியின் மனநிலை, இங்க அஹிம்சைக்கு இடமே இல்லைங்க.
ReplyDeleteவலியில்லா வரலாறுமில்லை..யுத்தமில்லா பூமியுமில்லை!!!
ReplyDeleteசமாதானம் என்பது நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள மட்டும் தானோ??
ReplyDeleteசின்ன சந்தேகம் தாரணை என்றால்???
சரியா சொன்னீங்க சமாதானம்ங்றது சும்மாதாங்க புனிதா :)
ReplyDeleteதாரணைன்னா ’மனம் குவிப்பு’ - ’தவம்’ தான் புனிதா :)
Hey! You started writing longer poems!! Awesome! I will take time and read them someday :)
ReplyDelete