Sunday, April 19, 2009

என்.ஆர்.ஐ பொழுதுகள்


சுப்ரபாத விழிப்பு
வளையமுடிந்த யோகா
ஃபில்டர் காபியுடன்
ஓரம் மடங்காத தினமணி
ஹமாம் சோப்புக்குளியல்
அரைமணி தியானம்
இட்லியுடன் தேங்காய் சட்னி
அலுவலக அவசரத்தில் அவள் முத்தம்
சிக்னல் விழாத சாலைகள்
சிதறவிரும்பாத வேலை
மாவடு ஊறிய தயிர்சாதம்
தாஜ்மஹால் டீயுடன்
புகைபிடிக்காத நண்பர்கள்
ஆறுமணி வீடு திரும்பல்
டீவி இல்லாத மாலை
ரசிக்கவொரு கவிதைப்புத்தகம்
என்னுடன் ரசிக்கும் அவள்
இருவரும் சமைத்த
எண்ணையில்லாத உணவு
லேசாய் குளிரும் மொட்டைமாடியிரவு
அவளின் முப்பத்தியேழு டிகிரி வெப்பம்
பேச சிலவிஷயங்கள்
சூடான பசும்பால்
சலிக்காத சிருங்காரம்
மார்மேல் அவள்கை
கனவில்லாத உறக்கம்.

மாறிக்கொண்டிருக்கும்
என் நிலங்களில்
டெட்லைன் வேலையின்பின்
பாஸ்தாவுடன் கொஞ்சம்
மெர்லாட் ஒயின் குடித்துத் திரும்பும் வழியில்
ஸ்டார் பக்ஸ் எஸ்ப்ரசோவிற்கப்பறம்
காலையில் க்ளையண்ட் மீட்டிங்கையும் சேர்த்து
இவையோசித்து
விழித்து கிடக்கிறேன்.

21 comments:

  1. ரொம்ப யதார்த்தமான வரிகள்....
    நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. சூப்பர்ப். :)

    ReplyDelete
  3. அக்கரை பச்சையாக
    இக்கரையில் இருக்கும்போது
    எக்கரை சிறந்ததென்று
    சர்க்கரை நினைவுகளில்
    வண்ணத்திரை விரித்து
    வாழும் என் ஆர் ஐ களின்
    எண்ணதிரைகளை இனிமையாக
    இயம்பிவிட்டீர்!

    ReplyDelete
  4. நன்றி கார்த்திக் :)

    ---

    நன்றி மேடி கவிதையான வாழ்த்திற்க்கு.

    ReplyDelete
  5. //லேசாய் குளிரும் மொட்டைமாடியிரவு
    அவளின் முப்பத்தியேழு டிகிரி வெப்பம் //

    மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...அழகான
    கவிதை...

    கூர்தலம் தாரணையாக மாறிவிட்டது...இனி இடைவெளி அதிகமில்லாமல் தாரணையில்
    கவித் தோரணை பார்க்கலாமா காந்தி...?

    ReplyDelete
  6. மிக்க நன்றி புதியவன் வாழ்த்திற்க்கும் எதிர்பார்ப்பிற்க்கும், நிச்சயம் முயற்சிக்கிறேன் :)

    ReplyDelete
  7. ஸ்ரீ, இப்படி ஸ்மைலி மட்டும் போட்டீங்கனா என்னாங்க அர்த்தம் :)

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

    ReplyDelete
  9. நன்றி யாத்ரா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்.

    ReplyDelete
  10. ஹய் இது நல்லா இருக்கேன்னு படிச்சிட்டே வந்தேன். கடைசில நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க. :) It's lovely!!

    ReplyDelete
  11. நன்றி சுகிர்தா உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும். உங்க (புனைப்?)பெயர் வித்தியாசமாயிருக்கு.

    ReplyDelete
  12. காணி நிலம் வேண்டும்ன்னு கேட்ட பாரதியார ஞாபகப்படுத்துறீங்க.. நல்லா இருக்கு காந்தி.. :)))

    //TKB காந்தி said...
    ஸ்ரீ, இப்படி ஸ்மைலி மட்டும் போட்டீங்கனா என்னாங்க அர்த்தம் :)//

    ப்ரெசென்ட் சார்ன்னு அர்த்தம் ;))))

    ReplyDelete
  13. நல்லா இருக்கு காந்தி..

    ReplyDelete
  14. இது இன்னாபா "தாரணை".. எனக்கு புரட்சி தளபதியோட "தோரணை" தான் தெரியும்..

    ReplyDelete
  15. நன்றி சரவணன். ’தாரணை’ கூர்த்தலறத்துக்கு முன்னாடியே யோசிச்சதுதாங்க இப்போ ஒரு சேஞ்சுக்காகத்தான் மாத்தினேன்.

    ReplyDelete
  16. இரசிக்க வைத்தன எல்லா வரிகளும்!!! கொஞ்சம் லேட்!!

    ReplyDelete