Wednesday, March 11, 2009

ஓசையடங்கிய மனம்

ஒரு நேர்கோட்டிலோ
எந்தவொரு புள்ளியிலுமோ
கிட்டத்தட்ட
வசப்படாத சூரியனின் முதல் கீற்றைப்போல
வட்டத்தின் அத்தனை மூலைகளிலும்
ஒருநொடிக்குள் தெறித்தோடி
மலையுச்சியில் குளிர் கூசி நிற்கும்
கோணிய என் மனதிற்கு
இப்போதைய
புருவமத்தியிலோ
பினியல் சுரப்பியிலோ
என்றோவொரு வயோதிக
மழைகாலங்களிளோ
பறைகிழித்துக்கேட்கும் அழுகுரலிலோ
அதைத்தாண்டி தூவப்படும்
ரோஜாவோ
செண்டுமல்லி வாசனையிலோ
அல்லது
தீயின் பிரதேசத்திலோ
எப்படியோ
என்றாவது சாத்தியப்படட்டும்
மூன்றாம் தந்திரத்தில்
திருமூலனருளிய
ஓசையடங்கிய மனம்.


9 comments:

  1. //இந்த பதிவுடன் கூர்தலறம் ஓய்வுபெறும், மீண்டுமொரு தருணத்தில் சந்திப்போம்.//

    ஏன் இப்படி?? :(((

    ReplyDelete
  2. வேலை பளு காரணமாகத்தான் இந்த முடிவு ஸ்ரீ, மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. ஓசையடங்கிய மனம்!!!!

    புதிதாக படிக்கிறேன் இப்படி வரிகளை. ஓசை அடங்கிய மனம், ஓ எத்துனை அருமையான நிலை அது!!!

    ""இந்த பதிவுடன் கூர்தலறம் ஓய்வுபெறும், மீண்டுமொரு தருணத்தில் சந்திப்போம்""......

    புதிய சிந்தனைகளை இங்கே படிக்க கிடைத்த வாய்ப்பு இனி இல்லாயோ என்று மட்டும் வருத்தம் தோன்றுகிறது. வேலை என்பதால் வேறு என்ன சொல்ல வாழ்த்துக்கள் தவிர

    ReplyDelete
  4. அப்படியொரு மனநிலை நிச்சயம் மிகவும் ரம்மியமானதாயிருக்கும் மேடி.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி :)

    ReplyDelete
  5. அருமை!!

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  7. பொது வாழ்க்கையிலா வந்துட்டா.. திரும்பி போதால் கூடாது காந்தி..
    Though u r busy, அப்பப்போ வந்து எழுதிட்டு போகவும்..

    ReplyDelete
  8. நன்றி சரவணன் உங்கள் தொடர் வாசிப்பிற்க்கும் ஆதரவிற்க்கும். நிச்சயம் திரும்ப எழுதுவேன்.

    ReplyDelete