Sunday, April 17, 2011

காற்றை வசப்படுத்தியவன்


Image: © BBC
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு
காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு...  
- 'மகாகவி' பாரதி 

தென்கிழக்கு ஆப்ரிக்காவின் மலாவி (Malawi), 2001-ல் இதுவரை சந்தித்திராத கடும் பஞ்சத்தை எதிர்கொண்டது, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோயினர். ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட முடிந்ததால் வருடத்திற்கான பள்ளி செலவாக 3500 ரூபாய் கொடுக்கமுடியாமல் 14 வயது வில்லியம் காம்க்வாம்பா (William Kamkwamba, ஆகஸ்டு 5, 1987)-வை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. மக்காச்சோளம் பயிரிட்டு அறுவடை செய்ய நெஞ்சில் உரமிருந்தாலும் கண்ணுக்கெட்டியவரை எங்கும் நீரில்லை. 

©2009 William Kamkwamba

வறண்ட பூமியை கண்டு சலித்தவருக்கு அதை தன் எதிர்காலமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இந்த பயத்திலிருந்து தப்பித்து நூலகம் சென்று படிப்பது மட்டுமே ஆறுதலாயிருந்தது, மலாவியில் 2% மக்கள் மட்டுமே அனுபவிக்கும் மின்சாரம் மீதேற்பட்ட ஆர்வத்தால் மோட்டார்கள், மின்சாரம் மற்றும் மின்காந்தவியலில் தொலைந்துபோவது ஒரு போதையாயிருந்தது. இயற்பியல் பிடித்துப்போனது. ஆங்கிலம் அதிகம் பழகாத காரணத்தால் புத்தகங்களிலுள்ள படங்களை படித்துக்கொண்டிருந்தார். அப்போது காற்றாலை மின்சாரக் காத்தாடியை முதல் முறையாக Using Energy புத்தகத்தின் அட்டைப்படத்தில் பார்க்க நேர்ந்தது.

Image: © curiouslee

இதன் மூலம் மின்சாரம் எடுக்க முடியும்! மின்சாரம் எடுக்கமுடியுமானால் நீர்ப்பாசனமும் செய்யமுடியும். நீர்ப்பாசனம் செய்யமுடிந்தால் பஞ்சத்தை விரட்டமுடியும். எங்கோ எதற்கோ வழியிருப்பதாய் தோன்றியது. ஆறு மாதமாய் இதே கனவு அவர் தூக்கத்தை கலைத்தது. அருகிலிருந்த புகையிலை தொழிற்சாலையின் பழைய tractor விசிறியை கண்டெடுத்தார். அதனுடன், நண்பனிடமிருந்து வாங்கிய PVC பைப்பை உடைத்து, உருக்கி பட்டையாக்கி 4 பிளேடுகள் கொண்ட விசிறியாக விரிவுபடுத்தினார். மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட shock absorber-ஐ உடைத்து அதிலுள்ள piston-ஐ shaft-ஆக உபயோகித்துக்கொண்டார். Washer-களுக்காக அவர்கள் ஊர் மதுக்கடைகளின் அருகிலுள்ள beer bottle-லின் மூடிகள் பயன்பட்டன. தன் அப்பாவின் பழைய சைக்கிளில் அனைத்தையும் ஒன்றாகப் பொருத்தினார். பிறகு பல மாதங்களாய் தேடியலைந்து கிடைத்த 12-V சைக்கிள் டைனமோவை அந்த சைக்கிளின் பின் சக்கரத்தில் பொருத்தினார். இவையனைத்தையும் 16 அடி உயரமுள்ள மரக்கம்புகள் மேலேற்றினார். பின், பழைய ரேடியோக்களிலிருந்து பிய்தெடுக்கப்பட்ட செம்பு வயர்களை அந்த டைனமோவுடன் இணைத்து ஒரு சிறிய பல்பை எரிய வைத்தார்.

Image: வில்லியம்-ன் காற்றாலை ©2009 William Kamkwamba (courtesy: http://www.solaripedia.com/)

காற்றடிக்கும்போதெல்லாம் அந்த பல்ப் ஆரஞ்சு முதல் மஞ்சள் வரை எரிந்தது. ஆனால், காற்றில்லாத பொழுதுகள் இருளில் கழிந்தன. அதைப் போக்க ஒரு பழைய கார் பேட்டரியை உபயோகித்து டைனமோவிலிருந்து வந்த மின்சாரத்தை சேமித்து தன் வீட்டில் 4 பல்புகளை எரியவைத்தார். தேவையானபோது உபயோகித்துக்கொள்ள அதற்கான switch-ஐயும் உருவாக்கினார். முதலில் தன் நண்பர்களால் கேலி செய்யப்பட்டு பின் ஊரே அவரை கஞ்சா ஆசாமியாய்ப் பார்த்தது. மின்சார விளக்கால் அவர் வீடு பிரகாசித்தபோது சத்தமில்லாமல் அருகே வந்து  மொபைல் charge செய்துகொண்டது அந்த ஊர். வறுமை மற்றும் இயலாமை பற்றி புலம்பாமல் தன்மீதிருந்த நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் மற்றும் அசாத்தியமான ஆர்வத்தாலும் தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்றமுடியும் என்று நிரூபித்துக்காட்டினார்.

Image: கார் பேட்டரியுடன் வில்லியம். ©2009 William Kamkwamba (courtesy: http://www.solaripedia.com/)

முதன் முதலில் 2006-ல் இதைப்பற்றியறிந்த அந்த ஊர் நாளேடுகள் செய்தி வெளியிட்டு இவரை அடையாளப்படுத்தின. அதன்பின் உலகமே இவரை கொண்டாட ஆரம்பித்தது. அமெரிக்காவின் முன்னனிப் பல்கலைகழகங்கள் /நிறுவனங்கள் இவருடைய பேச்சைகேட்க ஆவலாய் காத்திருக்கின்றன.   தென்னாப்ரிக்காவிலுள்ள Johannesburg-ன் African Leadership Academy-ல் பள்ளி கல்வியை முடித்து ஆகஸ்டு 2010 முதல் அமெரிக்காவில் New Hampshire-லுள்ள Dartmouth College-ல் பொறியியல் படித்து வருகிறார். தொழில்நுட்பக் கல்வி முடித்தவுடன் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கும் வேறுவழிகளை கண்டுபிடிக்கவும், அவற்றை மலாவியின் கிராமப்புரங்களில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

ஒரு தனி மனிதனின் கனவும், சிந்தனையும் - ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, ஒரு நாட்டையுமே வழிநடத்திச் செல்லக்கூடுமென்று தன் இருப்பை வைத்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் 
வில்லியம்.
 
வில்லியம் காம்க்வாம்பா-வைப் பற்றிய குறும்படம் (Moving Windmills.  © Directed by Tom Rielly and produced by Ben Nabors)



அவரைப்பற்றி:
  • A 2007 and 2009 TED Global Fellow.
  • Kamkwamba has been profiled in the Wall Street Journal.
  • His inventions displayed at Chicago's Museum of Science and Industry.
  • His memoir "The Boy Who Harnessed the Wind" has spent five weeks on New York Times bestseller list. 
  • Amazon.com choose "The Boy Who Harnessed the Wind" as one of their top 10 books of 2009.
மேலும்:
  1.  William Kamkwamba (இவரின் வலைப்பக்கம்)
  2. The Boy Who Harnessed the Wind: Creating Currents of Electricity and Hope (Amazon)
  3. Wikipedia
  4. BBC article
  5. Solaripedia
  6. MIT Tech TV

4 comments:

  1. நல்ல பதிவு. கவிதை எப்போது?

    ReplyDelete
  2. Good one after a long gap. All the best and continue sir.

    ReplyDelete
  3. Wonderful Post...!

    ஒரு தனி மனிதனின் கனவும், சிந்தனையும் - ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, ஒரு நாட்டையுமே வழிநடத்திச் செல்லக்கூடுமென்று தன் இருப்பை வைத்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் வில்லியம்...Great!

    ReplyDelete